அதிக வெப்பம் காரணமாக பாடசாலைகளுக்கு நேர காலத்துடன் பூட்டு

வட மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து மாகாண பாடசாலைகளையும் நண்பகல் 12 மணியுடன் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மாகாண முதலமைச்சர் சேஷல ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக இவ்வாறு பாடசாலைகள் முன்கூட்டியே மூடப்படவுள்ளதாக முதலமைச்சர் சேஷல ஜயரட்ண தெரிவித்துள்ளார்.

வட மத்திய மாகாணத்தில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினை நிலவுவதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலமையில் மாணவர்கள் மேலும் பாதிக்கப்படுவதை தவிர்க்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் வட மத்திய மாகாணத்தில் உள்ள தேசிய பாடசாலைகளுக்கு இந்த தீர்மானம் நடைமுறைக்கு வராது என்றும் அந்த மாகாண முதலமைச்சர் சேஷல ஜயரட்ண தெரிவித்துள்ளார்.

Related Posts