Ad Widget

அதிக வெப்பநிலையால் சிறுவர்கள் பாதிப்பு

வடமகாணத்தில் தொடரும் அதிக வெப்பநிலை காரணமாக பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

இன்று காலை 9.00 மணியில் இருந்து 11.00 மணிவரைக்கு கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைகளில் 100க்கு மேற்பட்ட சிறுவர்கள் வெளிநோயாளர் பிரவில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

மேலும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள், வெளிநோயாளர்கள் என பலர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

தொடர்ந்து அங்கே சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர்.

மேலும் பலர் உள்ளூர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அறியமுடிகின்றது. குறிப்பாக சிறுவர்களே அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

Related Posts