அதிக வெப்பத்தை தாங்க முடியாமல் வயோதிப பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு

உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட பலாலி தெற்கில் அமைந்துள்ள தனது காணியை துப்புரவு செய்த வயோதிப பெண், அதிகரித்த வெப்பநிலையால் மயங்கி வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (26) இடம்பெற்றுள்ளது.

பலாலி தெற்கைச் சேர்ந்தவரும் தற்போது கொழும்பில் வசித்து வந்தவருமான பற்றிக் பெர்ணான்டோ றீற்றம்மா (வயது 75) என்ற வயோதிப பெண் இவ்வாறு உயிரிழந்தார்.

காணி துப்புரவு செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்த வயோதிப பெண், அதிக வெப்பத்தை தாங்க முடியாமல் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும், அவர் உயிரிழந்தார். வெப்பம் காரணமாக அவரது உடலின் தோல் உரிந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

பலாலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விடுபட்ட தனது காணியை பார்வையிட மேற்படி வயோதிப பெண், ஆர்வத்துடன் கொழும்பில் இருந்து வருகை தந்ததாக உறவினர்கள் கூறுகின்றனர்.

Related Posts