அதிக நேர வேலை – மூளையில் இரத்தக் கசிவு ஏற்படும் ஆபத்து!

மனிதரொருவர் அதிகமான நேரம் வேலை பார்ப்பதற்கும் அவருக்கு மூளையில் இரத்தக் கசிவு ஏற்படும் ஆபத்து அதிகரிப்பதற்கும் இடையில் தொடர்பு இருப்பதாக புதிய ஆய்வொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

ஐரோப்பா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, ஆகிய நாடுகளில் ஆயிரக் கணக்கான தொழிலாளர்களின் வேலை நேர மற்றும் உடல் நலத் தரவுகளை ஆராயும் போது வாரத்திற்கு 55 மணி நேரத்துக்கும் கூடுதலாக வேலை பார்ப்பவர்களுக்கு வாரத்துக்கு நாற்பது தணி நேரத்துக்கும் குறைவான நேரம் வேலை பார்ப்பவர்களைக் காட்டிலும் மூளையில் இரத்தக் கசிவு ஏற்படும் ஆபத்து 03 மடங்கு அதிகமாக உள்ளதாக தெரிய வருகின்றது.

தி லான்செட் என்ற மருத்துவ சஞ்சிகையில் இந்த ஆய்வின் முடிவு பிரசுரிக்கப்பட்டுள்ளது.. கூடுதல் நேரம் வேலை பார்ப்பவர்களுக்கு இருதய நோய் வரும் ஆபத்தும் அதிகரிப்பதாக அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts