அப்ரிடி, உமர் அக்மல், அப்துர் ரகுமான், ராசாஹசன் ஆகிய நான்கு முன்னணி வீரர்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமான எடையுடன் இருந்ததால் அவர்களிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அபராதம் விதித்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் சபை சமீபத்தில் அதிரடியான உத்தரவாக ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர்கள் உடல் தகுதி இல்லாவிட்டால் அவர்களின் சம்பளத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்து இருந்தது.
அதன்படி வீரர்களிடம் உடல் தகுதி சோதனையை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நடத்தியது. இந்நிலையில் இருபதுக்கு 20 அணித்தலைவர் சகீத் அப்ரிடி, உமர் அக்மல், அப்துர் ரகுமான், ராசாஹசன் ஆகிய 4 முன்னணி வீரர்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமான எடையுடன் இருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அவர்களுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அபராதம் விதித்துள்ளது. மேலும் 4 மாதங்களுக்கு ஒரு முறை இந்த உடல் தகுதி சோதனையை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.