அதிகாலையில் வீடு புகுந்து இளைஞன் மீது சூடு!!

அதிகாலையில் வீடு புகுந்தவர்கள் இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞன், கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இடியன் துவக்கால் இளைஞனின் கால் பகுதியில் சூடு நடத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மல்லாவி பொலிஸ் பிரிவுக்கு மங்கை குடியிருப்பு பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

“மாட்டுப்பட்டி வைத்திருக்கும் 20 வயதுடைய சபேஷ் என்ற இளைஞன் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

சம்பவ தொடர்பில் இளைஞனிடம் விசாரணைகளை முன்னெடுத்தால்தான் மேலதிக தகவல்கள் தெரிய வரும்” என்று மல்லாவி பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts