அதிகாலையில் கைவரிசை

கைலாசப்பிள்ளையார் கோயில் பகுதில் உள்ள கடை ஒன்றின் கூரையைப் பிரித்து உள்ளே இறங்கிய திருடர்கள், 25 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவமொன்று நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

கடை உரிமையாளர், வழமைபோன்று நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில், வர்த்தக நிலையத்தை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். நேற்று காலை, கடையினைத் திறந்து உள்ளே சென்றபோது, கூரை பிரிக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, கடைக்குச் சென்று பார்த்தபோது, காசுப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 25ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இது தொடர்பில், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, பொலிஸார் விசாரணைகளை தேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts