Ad Widget

தடை உத்தரவையும் மீறி கொக்கிளாயில் விகாரை கட்டும் பிக்கு!

முல்லைத்தீவு, கொக்கிளாயில் அமைக்கப்படும் விகாரையின் கட்டடப் பணியை நிறுத்துமாறு கொழும்பிலிருந்து வந்த காணி அமைச்சின் அதிகாரிகள் தடையுத்தரவு பிறப்பித்தும் அதனையும் மீறி பிக்கு ஒருவர் விகாரையைத் தொடர்ந்து கட்டி வருகின்றார் என வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் நேற்று நடைபெற்ற போதே, அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

‘தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியில் விகாரை அமைக்கப்படுவதற்கு பொதுமக்கள் காட்டிய எதிர்ப்பு காரணமாக கொழும்பிலிருந்து வருகை தந்த காணி அமைச்சின் அதிகாரிகளால், தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு பிக்குவிடம் எழுத்துமூலமாக நேரடியாக வழங்கப்பட்டது.

எனினும், அதனையும் மீறி பிக்கு விகாரையைத் தொடர்ந்து கட்டி வருகின்றார். அதனைத் தடுப்பதற்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பலரிடம் கோரிக்கைகள் விடுத்தும் நிறுத்தப்படவில்லை. மக்களுடைய காணிகளை அரசாங்கம் சுவீகரிக்கக்கூடாது. இது எங்களுடைய பொதுவான விடயமாகவுள்ளது’ என்றார்.

Related Posts