அதிகரிக்கும் போர் பதற்றம் : ரஷ்யா மீது உக்ரைன் வான்வழி தாக்குதல்!!

ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள கெர்சன் பிராந்தியத்தை குறிவைத்து உக்ரைன் சரமாரியாக வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதலில் 20க்கும் மேற்பட்ட டிரோன்களை ரஷ்ய வான்பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ள நிலையில் 27 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உக்ரைன்-ரஷ்யா போரானது 2 ஆண்டுகளை தாண்டியும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts