அதிஉயரமான கட்டடத்தின் நிர்மாணப்பணிகள் ஆரம்பம்

இலங்கையில் அதிகூடிய உயரத்தை கொண்ட கட்டடத்தின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு 7ல் அமைந்துள்ள கொற்றன் பிளேசில் ( Horton Place ) அமைக்கப்படும் இந்த கட்டட நிர்மாணப்பணிகள் பாரிய நகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த கட்டடம் 75 மாடிகளைக்கொண்டதாக இது அமையவுள்ளது. இதற்காக 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படவுள்ளன.

2020ம் ஆண்டளவில் இதன் நிர்மாணப்பணிகள் பூர்த்திசெய்யப்படவுள்ளது.

Related Posts