தல அஜித் நடிக்கும் என்னை அறிந்தால் திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
இந்நிலையில் டீசருக்கு கிடைத்த வரவேற்பை வைத்து படத்தின் ஒரு பாடலான அதாரு உதாரு பாடலை நேற்று வெளியிட்டனர்.
ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தாலும் பொதுவானவர்கள் தல அறிமுக பாடல் சுமார் ரகம் என்று கூறி வந்தனர்.
இந்நிலையில் ட்விட்டரில் ஒரு ரசிகர் இது அஜித்தின் அறிமுக பாடலா என்ற கேள்வி எழுப்பி ஹாரிஸிடம் பதிலும் பெற்று விட்டார்.
அதாவது ரசிகர்கள் நினைக்கிற மாதிரி அதாரு உதாரு பாடல் அஜித்தின் அறிமுக பாடல் இல்லையாம், இது கேங்ஸ்டரை மையப்படுத்தி வரும் பாடலாம், அஜித் அறிமுகம் மிக வித்தியாசமாக இருக்கும் என்று ட்வீட் செய்து உள்ளார் ஹாரிஸ்.
இதை அறிந்த அஜித் ரசிகர்கள் இப்போதே வேட்டையாடு விளையாடு படத்தில் கமலுக்கு அமைந்த பாடல் போல் கற்பனை செய்ய ஆரம்பித்து விட்டனர்.