அண்ணாவுக்கு “பாரத ரத்னா” கருணாநிதி கோரிக்கை

இந்திய அரசின் மிக உயரிய விருதான “பாரத் ரத்னா” விருது தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் திமுக நிறுவனர்களில் ஒருவருமான அண்ணாவுக்கு அடுத்த ஆண்டு குடியரசுதினத்தில் அளிக்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு கருணாநிதி கோரிக்கை விடுத்திருக்கிறார்.

anna_thurai

இது தொடர்பில் இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆகியோருக்கு, தான் எழுதியிருக்கும் இரண்டு கடிதங்களில் தமது இந்த கோரிக்கையை கருணாநிதி வலியுறுத்தியிருக்கிறார்.

இந்திய நாட்டின் மூத்த தலைவர்களுக்கு ஆண்டு தோறும் பாரதரத்னா வழங்குவதையொட்டி, தென்னகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான அண்ணாவுக்கு இந்த ஆண்டு பாரதரத்னா விருது வழங்கும்படி கருணாநிதி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

திமுக நிறுவனரும், மிகப் பெரிய சமூக சீர்திருத்தவாதியும், எழுத்தாளரும், இலக்கியவாதியும், சொற் பொழிவாளருமான அண்ணா அவர்கள் இந்த விருதுக்குப் பெரிதும் பொருத்தமானவர் என்றும், அவருக்கு இந்த ஆண்டு “பாரத ரத்னா” விருது வழங்குவது பொருத்தமாக இருக்குமென்றும் தனது கடிதங்களில் கருனாநித் தெரிவித்து உள்ளார்.

Related Posts