குடும்ப பிரச்சினை கைகலப்பாக மாறியதில் அண்ணணை, தம்பி கத்தியால் குத்தியதில் அண்ணன், ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்ற இச் சம்பவத்தில் ஐந்து மாடி குடியிருப்பு, கடற்கரை வீதி, குருநகர் பகுதியினை சேர்ந்த மகிபாலன் நெல்சன் (வயது 38) என்பவர் வயிற்றில் குத்துக் காயங்களுக்குள்ளான நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சகோதரனான 35 வயதுடைய நபர், பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.