அண்ணன் பிரபாகரன் எந்த மூலையில் வாழ்ந்தாலும் நலமோடு வாழவேண்டும் : அமைச்சர் பா.டெனீஸ்வரன்

அண்ணன் பிரபாகரன் எந்த மூலையில் வாழ்ந்தாலும் நலமோடு வாழவேண்டும். தமிழ் மக்களுக்கான உரிமைகள் கிடைக்கின்றபோது அவர் மீண்டும் இங்கு வரவேண்டும். அவர் வருவார் என்ற நம்பிக்கை இருக்கின்றது என வடமாகாண போக்குவரத்து கடற்றொழில் அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார்.

வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் சனிக்கிழமை (14) மாலை இடம்பெற்ற பட்டப்போட்டியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அடிமைத்தனத்தில் இருந்து எம்மக்களை மீட்டு அவர்களுடைய உரிமையுடன் அவர்களை வாழவைக்கவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தான் அவர் அந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்தார். அவரது நோக்கம் நேர்மையானது. அண்ணன் பிரபாகரன் எந்த மூலையில் வாழ்ந்தாலும் நலமோடு வாழவேண்டும். தமிழ் மக்களுக்கான உரிமைகள் கிடைக்கின்றபோது அவர் மீண்டும் இங்கு வரவேண்டும். அவர் வருவார் என்ற நம்பிக்கை இருக்கின்றது என தெரிவித்தார்.

Related Posts