முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக, தொடர் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்புலவு மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் போராட்டம் இன்று (சனிக்கிழமை) போராட்டம் இடம்பெறும் இடத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.
முல்லைத்தீவில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் ‘காணி உரிமைக்கான மக்கள் ஊர்வலம்’ எனும் தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்ட ஊர்வலம், இன்றுடன் நிறைவடையவுள்ளது.
இதனை முன்னிட்டு இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கேப்பாப்புலவு மக்கள் தெரிவித்துள்ளனர்.