அடுத்த மாதம் ரஜினியின் படம் ஆரம்பம் : தனுஷ்

பா.ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படத்தை பார்த்து வியந்த ரஜினி, அவருக்கு தன்னை வைத்து கபாலி படத்தை இயக்கும் வாய்ப்பினை கொடுத்தார். அந்த படத்தையும் சிறப்பாக இயக்கி ரஜினி மனதில் இடம்பிடித்தார் ரஞ்சித். அதையடுத்து ஷங்கர் இயக்கத்தில் 2.ஓ படத்தில் நடித்துள்ள ரஜினி, மீண்டும் பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார்.

ரஜினியின் கேங்ஸ்டர் படமான பாட்ஷா மும்பையில் படமாக்கப்பட்ட முக்கியமான லொகேசன்களை பார்வையிட்டு வந்துள்ள பா.ரஞ்சித், ரஜினியை இயக்கும் புதிய படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பை மும்பையில்தான் நடத்துகிறார்.

மேலும், கபாலியைத் தொடர்ந்து மீண்டும் ரஜினியை வைத்து ரஞ்சித் ஒரு படம் இயக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட நடிகர் தனுஷ், அந்த படத்தை தானே தயாரிப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தின் அனைத்துக்கட்ட வேலைகளும் முடிந்து விட்டது. ஆக்சன் சொல்ல வேண்டியதான் பாக்கி என்று கூறியுள்ள தனுஷ், வருகிற மே மாதம் மத்தியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது என்று கூறியுள்ளார்.

Related Posts