அடுத்த மாதம் முதல் யாழ்தேவி ரயில் சேவை தெல்லிப்பளை வரை இடம்பெறும்

அடுத்த மாதம் முதல் யாழ்தேவி ரயில் சேவை தெல்லிப்பளை வரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

yarldevi

தொடர்ந்து அடுத்து வருடம் மார்ச்மாதம் காங்கேசன்துறை வரை ரயில் சேவையை விரிவுபடுத்த முடியும் எனவும் இதற்கான பணிகளை மேற்கொண்டு வரும் இந்தியாவின் இர்கொன் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்.புகையிரத நிலையத்திலிருந்து காங்கேசன்துறை வரையான ரயில்பாதை அமைப்புப் பணிகளை இந்தியாவின் இர்கொன் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

தண்டவாளம் அமைக்கும் பணிகள் பெருமளவான இடங்களில் முடிவுற்றுள்ள நிலையில் தற்போது புகையிரத நிலையங்களும் அமைக்கப்பட்டு வருகின்றது. மேலும் முழுமையாக தண்டவாளங்கள் அமைக்கப்பட்ட பகுதிவரை தொழில்நுட்ப ரீதியான செப்பனிடல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை கடந்த வாரம் பரிட்சார்த்தமாக கல்லு பரவும் சரக்கு ரயில் சுன்னாகம் வரை பயணித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Related Posts