இலங்கையின் வடக்கு பகுதியை தாழமுக்கம் ஊடறுத்து செல்லும் என விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
அவரது முகநூல் பதிவிலேயே இவ்வாறு குறிப்பிள்ளார்.
வங்காள விரிகுடாவில் நிலை கொண்டிருந்த தாழமுக்கம் வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து தற்போது குடத்தனைக்கு நேரே கிழக்காக 112 கி.மீ. தொலைவில் வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ளது.
இது இன்னும் சில மணி நேரத்தில் மேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலையில் இது யாழ்ப்பாணத்தின் வடக்கு பகுதியை ஊடறுத்து நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆயினும் இதனால் எமக்கு பாதிப்பு கிடையாது.
ஆனால் அடுத்த சிலமணி நேரங்களின் பின்னர் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கனமானது முதல் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
இந்நிலையில், இந்த மழை எதிர்வரும் 14.11.2022 வரை தொடர வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை,வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக கடற்பிரதேசத்தில் காற்றின் வேகம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதனால் அலைகளின் உயரமும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. எனவே கடற்கரைப் பகுதிகளுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது எனவும் தெரிவித்துள்ளார்.