அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் : அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

தொழிற்சங்க நடவடிக்கைக்கு அரசாங்கம் சரியான தீர்வு வழங்காவிட்டால் எதிர்வரும் நாட்களும் கடுமையான நடவடிக்கைகயை மேற்கொள்ளவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.

இது தொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை சம்பந்தமாக சங்கத்தின் மத்திய செயற்குழு கூடி தீர்மானிக்கும் என்று அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா கூறினார்.

இதேவேளை நேற்று வைத்தியர்கள் பணிப் புறக்கனிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அனுருத்த பாதெனியவிடம் சிகிச்சை பெறுவதற்காக தனியார் வைத்தியசாலையில் பதிவு செய்யப்பட்டிருந்தமை தொடர்பான தகவல்களை பிரதியமைச்சர ரஞ்சன் ராமநாயக்க நேற்று வௌிப்படுத்தியிருந்தார்.

எனினும் அது முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட ஒன்று எனவும், நேற்றைய தினம் எந்தவொரு தனியார் வைத்தியசாலையிலும் தான் பணியாற்றவில்லை என்றும் அனுருத்த பாதெனிய மறுப்பு தெரிவித்திருந்தார்.

Related Posts