அடுத்த இன்னிங்ஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் வெங்கட் பிரபு

தமிழ் சினிமாவில் இளைஞர்களை கவரும்படி படங்களை இயக்கும் இயக்குநர்களுள் ஒருவர் வெங்கட் பிரபு. அவரது இயக்கத்தில் கடைசியாக பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான `சென்னை 600028 இரண்டாவது இன்னிங்ஸ்’ படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது. வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனைத்தொடர்ந்து வெங்கட் பிரபு, `களவு’ என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். மேலும் தனது தயாரிப்பில் ஆர்.கே.நகர் என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்நிலையில், தனது அடுத்த இன்னிங்ஸ் குறித்த அறிவிப்பையும் அவரது டுவிட்டர் பக்கத்தில் வெங்கட்பிரபு வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

“சமீபத்தில் குறும்படம் எடுக்க வேண்டும் என்கிற தொற்று என்னை தாக்கிவிட்டது. ஆர்.டி.குமார் எழுதிய கதை மூலம் முக்கிய சமூக செய்தியை தெரிவிக்க இருக்கிறேன். அதுவும் 15 நிமிடத்திற்கு மிகாமல் படத்தை எடுக்க முடிவெடுத்துள்ளேன். முக்கிய கதாபாத்திரத்தில் சம்பத் நடிக்கும் அந்த படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஸ்ரேயான் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள, பிரவீன்.கே.எல். படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள இருக்கிறார்.

விரைவில் இப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. உங்களது ஆதரவோடு, இதுவே எனது அடுத்த இன்னிங்ஸாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன். வெங்கட் பிரபுவின் குறும்படம் விரைவில்….”

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Posts