அடுத்த ஆண்டுக்கான பாடசாலைகளின் கல்வித் தவணைகள் கல்வி அமைச்சினால் அறிவிப்பு

பாடசாலைகளுக்கான 2012ம் ஆண்டு கல்வி நடவடிக்கைகள் 203 நாட்கள் நடைபெற வேண்டுமென கல்வி அமைச்சின் செயலாளர் எச்.எம் குணசேகர அறிவித்துள்ளார்.அத்துடன் அதற்கான தவணைகள் பற்றிய விபரத்தினையும் வெளியிடப்பட்டது. அதன்படி தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலமான பாடசாலைகளில் முதலாம் தவணைக்கான கல்வி செயற்பாடுகள் யாவும் ஜனவரி 2ம் திகதி ஆரம்பமாகி ஏப்ரல் 5ம் திகதி வரை நடைபெறும். இரண்டாம் தவணை  ஏப்ரல் 23ம் திகதி முதல் ஆகஸ்ட் 3ம் திகதி வரையிலும் மூன்றாம் தவணை செப்டெம்பர் 3ம் திகதி முதல் டிசெம்பர் 7ம் திகதி வரையில் நடைபெறும்.

முஸ்லிம் பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான கல்வி செயற்பாடுகள் யாவும் ஜனவரி 2ம் திகதி முதல் ஏப்ரல் 5ம் திகதி வரையும் இரண்டாம் தவணை ஏப்ரல் 6ம் திகதி முதல் 17ம் திகதி வரையிலும் மூன்றாம் தவணை ஆகஸ்ட் 22ம் திகதி முதல் டிசெம்பர் 7ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

Related Posts