அடுத்து விஜய் படம்தான்! ஏ.ஆர்.முருகதாஸ்

அகிரா படத்தை இந்தியில் இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், அதையடுத்து மகேஷ்பாபு நடிப்பில் சாம்பவமி -என்ற படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கி வருகிறார்.

ஆக்சன் திரில்லர் கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் ராகுல்ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பரத், நதியா உள்பட பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், அடுத்து முருகதாஸ் எந்த ஹீரோவை வைத்து படம் இயக்குகிறார் என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

ஏற்கனவே அடுத்தபடியாக விஜய்யை வைத்துதான் அவர் படம் இயக்க அதிக வாய்ப்பிருப்பதாகவும், அந்த படம் துப்பாக்கி-2வாக இருக்கும் என்று செய்திகள் வெளியாகி வரும் நிலையில், தற்போது தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், அடுத்து விஜய்யை வைத்து படம் இயக்குவதை உறுதிபடுத்தியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.

ஆனால் அது துப்பாக்கி-2 படமா? அல்லது வேறு படமா?என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

Related Posts