அடுத்தவாரம் ஜனாதிபதியின் கைக்கு வருகிறது ஐ.நா அறிக்கை!

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையின் முற்பிரதி அடுத்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும், இந்த அறிக்கை கிடைத்தவுடன் அதற்குப் பதிலளிப்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, அரசாங்கத்தினால் இரண்டு குழுக்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா விசாரணை அறிக்கை இம்மாத இறுதியில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடத்தப்படவுள்ளது.

அதில் அரசாங்கத்தின் தரப்பில் பதிலளிப்பதற்காகவே, ஜனாதிபதி செயலகம் மற்றும் வெளிவிவகார அமைச்சு சார்பில் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts