அடுத்தடுத்த படங்களில் பிஸியாகும் கார்த்தி

தமிழ், தெலுங்கு அகிய இரு மொழிகளில் சமீபத்தில் வெளிவந்து ஹிட் கொடுத்த படம் ”தோழா”. அந்தப் படத்திற்க்கு பிறகு கார்த்திக் இரு மொழிகளிலும் இப்போது முன்னணி ஹீரோகளில் ஒருவராகிவிட்டார்.

கார்த்தி இப்போது இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் வரவிருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.”தனி ஒருவன்” படத்திற்று கதை எழுதிய சுப, இயக்குனர் மணி ரத்னம் எடுக்கும் படத்தில் கார்த்தியுடன் இணைந்து இருக்கிறார்.

விஜயேந்திரா பிரசாத் கார்த்தியை வைத்து படம் எடுக்க இருப்பதாவும், கார்த்தியிடம் அவர் கதை கூறியதாகவும் சொல்லுகிறார்கள். அப்படி இந்த படம் எடுக்கப்பட்டால் அந்த படத்தை விஜயேந்திர பிரசாத் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மற்றொரு புறம் கோலிவுட் மட்டும் இல்லாமல் பாலிவுட்டிலும் நடிகராக, நடன இயக்குனராக மற்றும் இயக்குனராக இருக்கும் பிரபுதேவா, கார்த்தி நடிப்பில் சுப கதையை வைத்து ஒரு படம் எடுக்க இருக்க உள்ளதாகவும் செய்தி வெளிவந்து கொண்டிருக்கிறது.

படக்குழுவினர்கள் கூறுவதை வைத்து பார்க்கையில் கார்த்திக்கு இரண்டு படங்கள் ரெடியாக இருப்பதாகவும், ஆனால் எந்தப்படம் முதலில் வெளியிட இருக்கிறது என்பதை பொறுத்து இருந்தால் தான் தெரியும். பிரபுதேவா இயக்க உள்ள படம், மணி ரத்னம் படத்திற்கு பிறகு வரலாம் என்றும் கூறப்படுகிறது.

Related Posts