அடுக்கடுக்கான இசையமைப்பில் யுவன்

தனுஷ், விஜய்சேதுபதி படங்கள் என இசையமைப்பில் படுபிஸியாக இருக்கும் யுவன் ஷங்கர் ராஜா, சிம்பு, ஆர்யா படங்களுக்கும் ஒப்பந்தம் ஆகியிருப்பதாக சொல்லப்படுகிறது.

’மஞ்சப்பை’ படத்தின் இயக்குநர் ராகவன் இயக்கத்தில் ‘கடம்பன்’ படத்தில் நடித்துவரும் ஆர்யா, அடுத்த படைப்பிற்காக, பல இயக்குநர்களிடம் கதை கேட்டுவருகிறார். இந்நேரத்தில் ஆர்யாவை சந்தித்து அமீர் கதை கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது.

அமீரின் கதையில், கதாநாயகன் பலசாலியாக இருக்கவேண்டுமென்பதால், ஆர்யா பொருத்தமாக இருப்பார் என்று பேசியிருக்கிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா பணியாற்றவிருப்பதாக தெரிவித்தார்கள்.

இப்படம் மட்டுமின்றி, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் “அன்பானவன் அசராதவன் அடங்காதவன்” படத்திற்கும் யுவன் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தில் சிம்பு மூன்று கெட்டப்களில் நடிக்கவிருக்கிறார். மேலும் நடிக நடிகைகள் தேர்வு தற்பொழுது நடந்துவருகிறது. இப்படத்தில் தான் இசையமைக்கவிருப்பதை ட்விட்டரில் யுவன் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

யுவன் இசையமைப்பில் யாக்கை, ராமின் “தரமணி”, சீனுராமசாமியின் “தர்மதுரை”, ராமின் “பேரன்பு”, வெங்கட் பிரபுவின் “சென்னை 600028”, கெளதம் மேனனின் “எனை நோக்கிப் பாயும் தோட்டா” உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts