அடியவர் மீது தொண்டர் தாக்குதல்;

தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயத்திற்க்கு வருகை தந்த அடியவர் மீது தொண்டர் ஒருவரினால் காலாலும் கையாலும் தாக்கப்பட்டு முகத்தில் காயம் அடைந்த சம்பவம் நேற்றைய தினம் தீர்தக்கேணியில் இடம் பெற்றுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,நேற்றைய தினம் தெல்லிப்பளை தூக்கையம்மன் ஆலய தீர்த்தக்கேணியில் சுவாமி தீர்தம் ஆடுவதற்க்காக வந்திருந்தது.

இந்த வேளையில் குடும்பஸ்தர் ஒருவர் தன் மனைவி மற்றும் இரண்டு சிறு  பிள்ளைகளுடன் கேணியின் கட்டில் அமர்ந்திருந்து தீர்த்த்தை பார்த்துக்கொண்டு இருந்தார்.

இந்த வேளையில் இந்து இளைஞர் தொண்டர் ஒருவர் குறிப்பி;ட்ட குடும்பஸ்தர் அமர்ந்திருந்த இடத்திற்க்கு சென்று வாய்த்தர்க்கத்தில் பல ஆயிரக்கண்கான அடியவாகள் முன்லையில் ஈடுபட்டதுடன் அவரை காலாலும் கையாளும் தாக்கி காயப்;டுத்தினார்.

இந்த வேளையில் பல அடியவர்கள் செய்வதாறியாது திகைதது நின்றதுடன் அந்த இடத்தில் பொலிசார் கடமையில் இருந்த போதிலும் குறிப்பி;ட்ட  குடும்பத்தவரை தாக்கிய  தொண்டர் மிது எந்த வகையான நடவடிக்கையும் மேற்க்கொள்ளாது பார்ததுக் கொண்டு இருந்தார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இத்தகைய தொண்டர்கள் ஆலயங்களில் தொண்டர் என்ற போர்வையில் ரவுடியிசம் செய்ய வேண்டுமா என பல அடியவர்களும் மனம் கொதித்த நிலையில் கேட்க்கின்றார்கள்.
தங்கம்மா அப்பாக்குட்டி இருந்த காலத்தில் இத்தகைய ரவுடியிசம் செய்பவகர்ளுக்கு இத்தகைய தொண்டர் சபைகளில் இடமளிப்பது இல்லை என ஆலயத்தில் வந்த மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Related Posts