நாகர்கோயில் கிராமத்தில் வசிக்கும் மக்கள் போதிய அடிப்படை வசதிகள் இன்மையால் தாங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கின்றனர்.
மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவிற்குள் இருக்கும் நாகர்கோயில் மக்கள் 2000 ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தினால் சொந்த ஊரினை விட்டு இடம்பெயர்ந்தனர்.
தொடர்ந்து 11 வருடங்களின் பின்னர் 2011 ஆண்டு ஆடி மாதம் சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர்.
தற்போது இக்கிராமத்திலுள்ள இரண்டு கிராமசேவையாளர் பிரிவுகளிலும் (ஜே-423, ஜே424) 400 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதுடன் இவர்களின் ஜிவனோபாயத் தொழிலாக மீன்பிடி இருக்கின்றது.
மீள்குடியேறி 3 வருடங்கள் கடந்த நிலையிலும் இப்பகுதிக்கு மின்சார வசதிகளோ, வீட்டுத்திட்ட செயற்பாடுகளோ மேற்கொள்ளப்படவில்லை. இதன் மூலம் தங்கள் கிராமம் புறக்கணிக்கப்படுவதாக அம்மக்கள் தெரிவித்தனர்.
அத்துடன், தமது தொழில் நடவடிக்கைகள் மூலம் பிடிக்கப்படும் மீன்களைப் பேணிப்பாதுகாப்பதற்கு ஏற்ற வசதிகள் இன்மையினால் தங்கள் பொருளாதார நிலைகளை மேம்படுத்துவதற்கு முடியவில்லையெனவும் அம்மக்கள் மேலும் தெரிவித்தனர்.