அடிப்படை வசதிகளற்ற நிலையில் அறுகுவெளி மக்கள்

தென்மராட்சியின் தனங்கிளப்பு அறுகுவெளிப் பகுதியில் மீளக்குடியமர்ந்துள்ள சுமார் 20 குடும்பங்கள் அடிப்படை வசதிகளற்ற நிலையில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

போர் காரணமாக தமது சொந்த இடங்களிலிருந்து பல இடங்களில் இடம்பெயர்ந்திருந்து, தற்போது தங்களுடைய சொந்த இடத்துக்கு மீளக்குடியேறியுள்ளனர்.

ஆனால், அடிப்படை வசதிகளற்ற நிலையில் நெருக்கடி நிலையினை எதிர்கொண்டு வருகின்றனர்.

இக் கிராமத்துக்கு இதுவரையில் வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை. இந்தக் கிராம மக்கள் குடிநீருக்காக 1 கிலோமீற்றர் சென்று பெறவேண்டியுள்ளது.

இந்தக் கிராமத்தின் பிள்ளைகள் நாவற்குழி மகா வித்தியாலத்தில் கல்விகற்கின்றனர். அவர்கள் சென்று வருவதற்கு போக்குவரத்து வசதிகள் இல்லை.

முதலில் தற்காலிக வீடுகளையும் மலசல கூடங்களையும் அமைத்துத் தருவதற்கு உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related Posts