அடிப்படைச் சம்பளத்தை இரு மடங்காக அதிகரிப்பதற்கு திட்டம்

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை இரு மடங்காக அதிகரிப்பதற்கு அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இதனடிப்படையில் அரச சேவைத் துறையினரின் அடிப்படைச் சம்பளம் 11,730 ரூபாவிலிருந்து 24,230 ரூபா வரை அதிகரிக்கும் என அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரச ஊழியர்களுக்கான தேசிய சம்பள கொள்கையினை தயாரிக்கும் நடவடிக்கையினை துரிதமாக நிறைவு செய்யவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

Related Posts