அடிக்கல் நாட்டிய கட்டடம் எங்கே???

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்துக்கான சிகிச்சையியற் துறைக்கான கட்டடம் அமைப்பதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அருகிலுள்ள காணியில் கடந்த ஜூன் மாதம் 14ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டும் இன்னமும் கட்டடம் அமைக்கப்பதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை.

uni-bulding-dak

முன்னாள் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸநாயக்க, முன்னாள் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா இணைந்து இக் கட்டடத்துக்கான அடிக்கல்லை நாட்டினர்.

கட்டடப் பணிகள் இன்னமும் அங்கு ஆரம்பிக்கப்படாமையால் காணியின் ஒரு பகுதியில் வாகனப் பாதுகாப்பு நிலையம் இடம்பெறுகின்றது. ஒரு பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றது. காணியின் எல்லையில் நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது.

எனவே,இது தொடர்பில் சம்பந்தப்பட்டோர் உடன் நடவடிக்கை எடுக்குமாறு பிரதேசவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts