அஞ்சல் பணியாளர்களினால் மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டம் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது. அஞ்சல் சேவையாளர்களின் தொழிற்சங்க முன்னணி இதனைத் தெரிவித்துள்ளது.
புதிய ஆட்சேர்ப்பு முறைமை மற்றும் மேலதிக நேர பணிகளுக்கான கொடுப்பனவுகளை மீள வழங்கல் உள்ளிட்ட 14 கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராடடம் நடத்தப்பட்டது.
பிரதமரின் செயலாளர், அரச நிர்வாக அமைச்சு மற்றும் அஞ்சல் சேவைகள் அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், இந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தைகளின் போது அடுத்த மாதம் 4ம் திகதிக்கு முன்னர் தீர்வுகளை வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளதாகவும், உறுதியளிக்கப்பட்ட விடயங்கள் நிறைவேற்றப்படாவிட்டால், மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்றும் தொழிற்சங்க முன்னணி எச்சரித்துள்ளது.