மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் ஊழியர்கள் இன்றும் (28) பணிநிறுத்த போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க சம்மேளன முன்னணியின் துணை இணைப்பாளர் எச்.கே.காரிய வசம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
நாட்டின் பிரதான 3400 க்கும் அதிகமான அஞ்சலகங்களில் இந்த பணிநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
நுவரஎலிய, கண்டி, காலி மற்றும் கொழும்பு கோட்டை ஆகிய அஞ்சல் காரியாலயங்கள் அகற்றப்பட்டு சுற்றுலா விருந்தகங்கள் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.