அஞ்சலோ மெத்தீவ்ஸ் விளையாடுவதில் சந்தேகம்

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

anjelo

 
இந்த போட்டி இங்கிலாந்தின் பேர்மிங்ஹேமில் இடம்பெறவுள்ளது.
 
இன்றைய போட்டிக்கான இங்கிலாந்து அணியில் பெரும்பாலும் மாற்றங்கள் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
எனினும் முதல் போட்டியில் ஓய்வளிக்கப்பட்டிருந்த ஸ்ரீவன் ஃபின் இன்று இணைக்கப்படுவார் என்று கூறப்பட்டிருந்த போதும், அவருக்கு பதிலாக முதல் போட்டியில் விளையாடிய லியம் பிலங்கட்டின் சிறப்பான ஆட்டம் காரணமாக, அவரே இன்றைய போட்டியிலும் விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதேநேரம், மிடில்செக்ஸ் பிராந்திய அணிக்கான 20க்கு 20 போட்டியில் விளையாடுவதற்கு, ஸ்ரீவன் பின் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
அதேநேரம் இலங்கை அணியை பொறுத்தவரையில் அணித் தலைவர் அஞ்சலோ மெத்தீவ்ஸ் விளையாடுவதில் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
 
நேற்றையதினம் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட உடற்தகுதி பரிசோதனையில் 70 சதவீதமான தகுதிநிலை வெளிப்பட்டது.
 
இந்த நிலையில் இன்று போட்டிக்கு முன்னதாக மற்றுமொரு உடற்தகுதி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதன் பின்னரே அவர் விளையாடுவாரா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும் என்று அணித்தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts