அஜீத் ஸ்டைலைப் பின்பற்றும் அர்ஜுன்

தமிழ் சினிமாவின் ஆக்ஷன் கிங் என்று புகழப்படுபவர் அர்ஜுன். ஏராளமான தேசப்பற்று படங்களில் நடித்திருக்கும் அர்ஜுன் தற்போது தனது வயதுக்கேற்ற வேடங்களில் நடித்து வருகிறார்.

Arjun

அந்த வகையில் தற்போது டி.எஸ்.பி.யாக அர்ஜுன் நடித்து வரும் படம் ‘நிபுணன்’. அருண் வைத்தியநாதன் இயக்கும் இப்படத்தில் அர்ஜுனுடன் இணைந்து பிரசன்னா, சுஹாசினி மணிரத்னம், வரலட்சுமி சரத்குமார், வைபவ் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

நகைச்சுவை உணர்வு கொண்ட போலீஸ் அதிகாரியான அர்ஜுன் குற்ற சம்பவங்களை எப்படி திறமையுடன் கையாளுகிறார் என்பதுதான் படத்தின் கதையாம்.

நிபுணனில் முதன்முறையாக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அர்ஜுன் நடித்திருக்கிறார். வித்தியாசமான இந்த ஹேர்ஸ்டைல் ரசிகர்களை நிச்சயம் கவரும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

தமிழ், கன்னடம் என 2 மொழிகளில் உருவாகி வரும் ‘நிபுணன்’ விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘மங்காத்தா’ படத்தில் முதன்முறையாக அஜீத் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்திருந்தார். அதன்பிறகு ஏராளமான நடிகர்கள் இந்த ஹேர்ஸ்டைலை பின்பற்றுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

மங்காத்தாவிற்குப் பின் அஜீத் தொடர்ந்து சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிலேயே நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Posts