Ad Widget

அஜீத்-விஜய் பாடல்களை விமர்சித்த கங்கைஅமரன்!

தமிழ் சினிமாவில் பாடலாசிரியர், இசையமைப்பாளர், இயக்குனர், நடிகர் என பல அவதாரங்களை எடுத்தவர் கங்கைஅமரன்.

ajith-vjiay-kankai-amaran

இவர் இயக்கிய கரகாட்டக்காரன் படம் வருடக்கணக்கில் ஓடியது. மேலும் கோழிக்கூவுது, பொழுது விடிஞ்சிருச்சி, எங்க ஊரு பாட்டுக்காரன், கும்மக்கரை தங்கையா, கோயில்காளை என 20 படங்கள் இயக்கியிருக்கிறர்ர.

அதோடு, 40 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும் இவர், அலைகள் ஓய்வதில்லை, கடல் மீன்கள், ரோசாப்பூ ரவிக்கைக்காரி, கரகாட்டக்காரன், மூடுபனி, பதினாறு வயதினிலே, சரோஜா உள்பட ஏராளமான படங்களில் பாடல்கள் எழுதியிருக்கிறார்.

தற்போது திரைப்படத் தணிக்கைக்குழு அதிகாரியாக உள்ளார்.

இந்நிலையில், சமீபகாலமாக சினிமா மேடைகளில் தனது மனதுக்கு தோன்றும் விசயங்களை விமர்சித்தும் வருகிறார்.

அந்த வகையில், தனது அண்ணன் இளையராஜாவையும் விட்டுவைக்கவில்லை கங்கைஅமரன். இதற்கிடையே அவர் அஜீத்-விஜய் படங்களின் பாடல்களையும் தற்போது விமர்சித்துள்ளார்.

அஜீத்தின் வேதாளம் படத்தில் இடம்பெற்ற ஆளுமா டோளுமா, விஜய்யின் தெறி பாடலான ஜித்து ஜில்லாடி பாடல்களை குறிப்பிட்டு, இதெல்லாம் என்ன பாடல். இந்த மாதிரி புரியாத வார்த்தைகளைக்கொண்டு பாடல் எழுத வைத்து தமிழை ஒழிக்கிறார்கள் -என்று ஒரு ஊடக பேட்டியில் பதிவு செய்திருக்கிறார்.

Related Posts