அஜீத் படம் பற்றி கவுதம் மேனன் விளக்கம்

தல அஜீத், அனுஷ்கா நடிப்பில், கவுதம் மேனன் இயக்கி வரும் படத்திற்கு இன்னும் அதிகாரப்பூர்வ டைட்டில் வைக்கவில்லை. சத்யா என்று வைத்திருப்பதாக தெரிகிறது. படத்தின் கதை பற்றியும் பல்வேறு செய்திகள் உலவுகிறது. இதற்கு விளக்கம் தருகிறார் கவுதம் மேனன்.

ajith-gowtham

அவர் கூறியிருப்பதாவது: நான் எப்போதுமே படத்தோட டைட்டிலை முதல்ல சொல்லிவிட்டுத்தான் ஷூட்டிங்கே ஆரம்பிப்பேன். இந்த படத்துல அது முடியாமப்போச்சு. அதுக்கு காரணம் அவசர அவசரமா ஷூட்டிங் கிளம்பினதுதான்.

சூர்யா படம் இல்லேன்னு ஆனதும், சரி சிம்புவை வச்சி பண்ணலாமுன்னு ஒரு படம் ஆரம்பிச்சேன். திடீர்னு அஜீத் சார் போன் பண்ணி “நான் கவுதம் மேனன் படத்துல நடிக்கணும், உங்க ஸ்டைல்ல ஒரு கதை ரெடி பண்ணுங்க”ன்னு சொன்னார். ஒரு மாசத்துல கதை ரெடி பண்ணி அவர்கிட்ட ஓகே வாங்கி அப்படியே சூட்டிங் கிளம்பியாச்சு.

இப்போ ஒரு மாசமா அவரோட சூட்டிங்தான் நடந்திட்டிருக்கு. பன்ஞ் டயலாக்குலேருந்து அவரோட வழக்கமான எதுவும் வேணாமுன்னு சொலிட்டாரு. அவசரமா ஷூட்டிங் கிளம்பிட்டதால டைட்டில் முடிவு பண்ணல. “என்னை பில்டப் பண்ணுற மாதிரி டைட்டில் வைக்காதீங்க”ன்னு வேற அவர் சொல்லிட்டதால் தீவிரமா அதுபற்றி யோசிச்சிட்டிருக்கேன்.

அவரோட கேரக்டரை ஒட்டி டைட்டில் வைக்கலாமான்னு ஒரு யோசனை இருக்கு. கதை பற்றி வர்ற நியூஸ் எதுவுமே உண்மையில்லை. இது ஒரு கேரக்டரை மையமாக கொண்ட கதை (ஸ்பைடர் மேன், சூப்பர் மேன், கிரிஷ், ஜேம்ஸ் பாண்ட் மாதிரி).

இந்த படம் வெற்றி பெற்றால் இதோட அடுத்தடுத்த பாகம் எடுக்கலாமுங்ற யோசனை இருக்கு. அதே மாதிரி அரவிந்த் சாமி நடிக்கிறார்ங்றதுலேயும் உண்மை இல்லை. அனுஷ்கா நடிக்கிறாங்க. த்ரிஷா ஒரு பவர்புல் கேரக்டர் பண்றாங்க. இப்போதைக்கு இவ்ளோதான் சொல்ல முடியும். என்கிறார் கவுதம் மேனன்.

Related Posts