அஜீத் படத்தில் சந்தானத்துக்கு பதிலாக கருணாகரன்!

விஜய் நடித்து வெளியான புலி படத்தில் காமெடியனாக நடிக்க வடிவேலுவிடம்தான் முதலில் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், அவர் தான் நடிக்க வேண்டுமென்றால் இன்னொரு ஹீரோ அளவுக்கு சம்பளம் தர வேண்டும் என்று அடித்து சொன்னதால், அவருக்குப்பதிலாக அந்த படத்தில் நான் கடவுள் ராஜேந்திரனை நடிக்க வைத்தனர். அந்த வகையில் அந்த படத்துக்காக 60 நாட்கள் கால்சீட் கொடுத்து நடித்தார் ராஜேந்திரன்.

karunakaran

அதேபோல் இப்போது அஜீத்தின் 57வது படத்தில் காமெடியனாக நடிக்க சந்தானத்திடம் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், அவர் தற்போது ஹீரோவாகி விட்டதால் மீண்டும் காமெடியனாக நடித்தால் தனது ஹீரோ இமேஜ் பாதிக்கும் என்று நடிக்க மறுத்து விட்டார். அதையடுத்து இப்போது கருணாகரனிடத்தில் அஜீத் படத்தில் காமெடியனாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளாராம் டைரக்டர் சிவா. இந்த தகவலை கருணாகரனே தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Related Posts