‘வேதாளம்‘ படத்துக்குப் பிறகு, அஜீத் நடிக்கும் 57-வது படத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த படத்தையும் சிவா இயக்குகிறார்.
அஜீத் பிறந்த நாளான மே 1-ந் தேதி இந்த படத்துக்கான பூஜை போடப்படுகிறது. படப்பிடிப்பு ஜூன் முதல் வாரத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க பாலிவுட் நடிகை கிரிதி சனோனிடம் பேச்சு வார்த்தை நடந்து வந்தது. ஆனால், சமீபத்தில் வந்த தகவலின்படி இவர் இதில் நடிக்கவில்லை என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது..
இப்போது இந்த படத்தில் அஜீத் ஜோடியாக அனுஷ்கா நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. ‘என்னை அறிந்தால்’ படத்துக்குப் பிறகு இதில் மீண்டும் இருவரும் ஜோடி சேருகிறார்கள். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.