அஜீத்தின் சிதம்பர ரகசியம்: உடைத்தார் தயாரிப்பாளர்!!

அஜீத்தின் பெருந்தன்மையை பல வருடங்களுக்குப் பிறகு தயாரிப்பாளர் திருப்பூர் சுப்பிரமணியம் வெளியே கூறியுள்ளார்.

நடிகர் அஜீத் தான் உண்டு, தன் வேலை உண்டு என்றிருப்பவர். அவர் எந்த ஒரு பிரச்னையிலும் சிக்காமல் தனக்கென ஒரு பாதையை அமைத்துக்கொண்டு அதன்படி நடப்பவர். இந்நிலையில் பல வருடங்களுக்கு முன் நடிகர் அஜீத்தைப் பற்றிய ஒரு சம்பவத்தை பிரபல தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான திருப்பூர் சுப்பிரமணியம் வெளி உலகத்திற்கு கொண்டு வந்தார்.

அஜீத்தும், நிக் ஆர்ட்ஸ் மூவீஸ் தயாரிப்பாளர் சக்கரவர்த்தியும் நண்பர்கள். நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பில் பல படங்களில் நடித்தார் அஜீத். இடையில் சக்கரவர்த்திக்கும், அஜீத்துக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால் அந்த தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்க மறுத்துவிட்டார் அஜீத்.

இந்நிலையில் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி பெரும் கஷ்டத்தில் இருந்துள்ளார். இவரது கஷ்டத்தை அஜீத்திடம் திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளார். அதற்கு அஜீத், திருப்பூர் சுப்பிரமணியத்திடம், ‘’தற்போது நான் வாங்கும் பாதி சம்பளத்திற்கு அவர் படத்தில் நடிக்கிறேன். அதன்பிறகு அவர் தயாரிப்பில் நடிக்க மாட்டேன்’ என்று அஜித் கூறியதாக சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். சக்கரவர்த்தியும் இதற்கு சம்மதிக்க, அப்படி தயாரான படம்தான் ‘பில்லா’

இந்த விஷயத்தில் அஜீத் மிகவும் நேர்மையாக நடந்து கொண்டார், நாங்கள் அவரை மிரட்டவில்லை, அவர் எங்க மிரட்டலுக்கெல்லாம் பயப்படக்கூடிய ஆளா என்று அஜீத்தின் பெருந்தன்மையை வெளி உலகத்திற்கு கொண்டு வந்துள்ளார் திருப்பூர் சுப்பிரமணியம்.

Related Posts