அஜித், விஜய் இணைந்து ரசிகர்களை சந்திக்க முடிவு?

தமிழ் திரையுலகையே தங்கள் கையில் வைத்திருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்களின் ரசிகர் பலத்தை நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியது இல்லை.

ajith_vijay001

ஆனால் சில ஊடகங்கள் அவர்கள் விளம்பரத்திற்காக இவர்களை பகடைகாயாக பயன்படுத்துகின்றனர்.

இதில் சமீபத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ பட்டத்தை வைத்துகொண்டு இவர்கள் அடித்த கூத்து உங்களுக்கே தெரிந்திருக்கும், இதனால் ரசிகர்களுக்கிடையே சமூக வலைத்தளங்களில் கடும் சண்டை வந்தது தான் மிச்சம், இனியும் இதுபோல் ஏதும் நடக்ககூடாது என்று ’தலதளபதி’ இணைந்து ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார்களாம்.

விஜய், அஜித் இருவரும் இணைந்து பேட்டி கொடுத்தால் தான் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும் என்று பலர் கூற, தற்போது இருவருமே இணைந்து இது குறித்து ரசிகர்களிடம் தங்கள் கருத்தை தெரிவிக்க இருப்பதாகவும், குறிப்பாக இனி ரசிகர்கள் யாரும் தேவையில்லாத சண்டைகளில் ஈடுபடகூடாது என்றும் தெரிவிக்க உள்ளதாக நெருங்கியவட்டாரங்கள் கூறுகின்றனர்.

Related Posts