அஜித், விஜய்க்கு இடம் இல்லை

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவை சேர்ந்த 100 பிரபலங்களின் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் இந்த ஆண்டும் 100 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியல் பிரபலங்களின் வருமானம் மற்றும் அவர்கள் எவ்வளவு பிரபலமாக உள்ளனர் என்ற அடிப்படையில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் ஷாருக்கான் முதல் இடத்தை பிடித்து உள்ளார். கடந்த ஆண்டு பட்டியலில் முதலிடத்தில் இருந்த சல்மான் கான் இந்த ஆண்டு பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டு இரண்டாவது இடத்தில் இருந்த அமிதாப் பச்சன் இந்த ஆண்டு மூன்றாவது இடத்தில் உள்ளார். தோனி 4-வது இடத்திலும், அமீர்கான் 5-வது இடத்திலும், அக்ஷய் குமார் 6-வது இடத்திலும், விராட் கோலி 7-வது இடத்திலும், சச்சின் டெண்டுல்கர் 8-வது இடத்திலும், தீபிகா படுகோனே 9-வது இடத்திலும், ரித்திக் ரோஷன் 10-வது இடத்திலும் உள்ளனர்.

கடந்த ஆண்டு பட்டியலில் 13-வது இடத்தில் இருந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த ஆண்டு 14-வது இடத்தில் உள்ளார். தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு 36-வது இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டு பட்டியலில் 78-வது இடத்தில் இருந்த தனுஷ் பல இடங்கள் முன்னேறி இந்த ஆண்டு 37-வது இடத்திற்கு வந்துள்ளார்.

கடந்த ஆண்டு போர்ப்ஸ் பட்டியலில் 41வது இடத்தில் இருந்த விஜய்யும் 51-வது இடத்தில் இருந்த அஜித்தும் இந்த ஆண்டு பட்டியலில் இடம் பெறவில்லை.

மேலும் இந்த பட்டியலில் இந்த ஆண்டு கமல் 46-வது இடத்திலும், ரஜினிகாந்த் 69-வது இடத்திலும், சந்தானம் 52-வது இடத்திலும், சூர்யா 71-வது இடத்திலும், பிரபாஸ் 77-வது இடத்திலும், ஆர்யா 80-வது இடத்திலும், பிரபுதேவா 88-வது இடத்திலும் உள்ளனர்.

Related Posts