அஜித் ரசிகர்களுடன் மோதிய ஜி.வி. பிரகாஷ்!

ட்விட்டரில் அஜித் ரசிகர்களுக்கும் ஜி.வி. பிரகாஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சமீபத்தில் வெளிவந்த கடவுள் இருக்கான் குமாரு படம் குறித்து ரசிகர்கள் சிலர் விமரிசனங்களை முன்வைத்தார்கள்.

இதையடுத்து, அஜித் ரசிகர்களை ஆமைகள் என்று ஜி.வி. மறைமுகமாகக் கூறியதால் அஜித் ரசிகர்கள் ஜி.விக்கு எதிராக ட்விட்டரில் திரண்டார்கள். பதிலுக்கு விஜய் ரசிகர்கள் ஜி.விக்கு ஆதரவாகக் களமிறங்கினார்கள்.

மேலும் தனுஷை எதிர்த்தபிறகே தான் சினிமாவில் பெரிய ஆளாக ஆனேன் என்று ஜி.வி ட்வீட் செய்ததால் மேலும் சர்ச்சை ஆனது. பிறகு சர்ச்சைகள் ஏற்படுத்திய ட்வீட்களை நீக்கிவிட்டார் ஜி.வி.

இதுகுறித்து ட்வீட் செய்த ஜி.வி. பிரகாஷ், தொழில்ரீதியாக தான் இங்கு உள்ளேன். மற்றபடி எது குறித்தும் புலம்புவதற்காக அல்ல. நான் ஒருவரைப் பின்தொடர்கிறேன் என்றால் அது என் விருப்பம். நீங்களும் அதைக் கண்டு புலம்பக்கூடாது என்று கூறியுள்ளார்.

Related Posts