அஜித் ரசிகர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி!

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில் தல அஜித், காஜல் அகர்வால் நடிப்பில் பிரம்மாண்டமாய் உருவாகியிருக்கும் படம் ‘விவேகம்’. இப்படத்தின் மூலம் உலகநாயகனின் இரண்டாவது மகளான அக்ஷரா ஹாசன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். மேலும் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சமீபத்தில் வெளியாகிய இப்படத்தின் டீசர் இந்திய சினிமாவில் புதிய சாதனையை படைத்தது. மேலும் படத்தில் இருந்து மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே உருவாகியுள்ள இப்படம், சமீபத்தில் தணிக்கை குழு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. படத்தை பார்த்த தணிக்கை குழு படத்திற்கு `யு/ஏ’ சான்றிதழை வழங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தில் நிறைய அதிரடி சண்டைக் காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் படத்திற்கு யு/ஏ சான்றிதழை வழங்கியருப்பதாக கூறப்படுகிறது. எனினும் சண்டைக்காட்சிகளுக்கு பஞ்சம் இல்லை என்பதால் அது அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தான் என்பதில் சந்தேகமில்லை.

படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியது முதல் தல ரசிகர்கள் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இதனை டிரெண்டாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், படத்தை 24-ஆம் தேதி வெளியிலாமா என்று படக்குழு ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. எனினும் படத்தின் அதிகாரப்பூர்வ தகவலுக்காக காத்திருக்கத் தான் வேண்டும்.

Related Posts