அஜித் பற்றி தவறாக பேசினேனா? உதயநிதி விளக்கம்

சமூக வலைத்தளங்களில் சமீபகாலமாக பிரபல நடிகர்களின் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்வது வாடிக்கையாகி வருகிறது.

uthayanethy-stalin-uthaya

சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்ட ஒரு டுவிட்டுக்கு, அஜித் ரசிகர் ஒருவர் அவரை கிண்டல் செய்து கமெண்ட் ஒன்றை பதிவு செய்ததாக கூறப்படுகிறது. எனவே, கடுப்பான உதயநிதி, அவரிடம் அஜித்தை பற்றி தவறான வார்த்தைகளால் திட்டியதாக ஒருசில இணையதளங்களில் செய்தி வெளியானது.

இதுபற்றி அறிந்ததும் அஜித் ரசிகர்கள் வழக்கம்போல், தங்களது நடிகரை வசைபாடிய உதயநிதியை பதிலுக்கு வசை பாட தொடங்கினர். இதுகுறித்து, அறிந்ததும் அதிர்ச்சியடைந்த உதயநிதி, அஜித்தை பற்றி அவதூறாக பேசியதாக சில விஷமிகள் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். நான் அஜித் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். இதுபோன்ற தவறான செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள் என்று கூறியுள்ளார்.

அதேபோல், இணையதளங்களுக்கு ஒரு வேண்டுகோளும் வைத்துள்ளார். அதாவது, என்னைப் பற்றியோ, என் படங்களை பற்றியோ செய்தி வெளியிடும் முன் என்னிடம் கேட்டு விவரம் அறிந்துகொண்டு, அதன்பின்னர் வெளியிடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Posts