அஜித் பரிசு கொடுத்த கடிகாரத்தில் பிழை: விவேக்

காமெடி நடிகர் விவேக், அஜித்துடன் ‘காதல் மன்னன்’, ‘வாலி’, ‘என்னை அறிந்தால்’ உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளத்தில் விவேக்குக்கு அஜித் கொடுத்த பரிசு குறித்த செய்தியை வைரலாக பரவி வருகிறது.

அதாவது ஒருமுறை அஜித்தும், விவேக்கும் காரில் பயணம் செய்துகொண்டிருந்த போது, அஜித் கையில் இருந்த ரோலக்ஸ் வாட்ச் விவேக்கை ரொம்பவும் கவர்ந்துள்ளதாகவும், அந்த வாட்சின் அழகை பார்த்து வியந்துபோன விவேக், என்றாவது தானும் அதுபோன்ற ஒரு வாட்சை வாங்குவேன் என்று அஜித்திடம் கூறினாராம்.

உடனே அஜித் சற்றும் யோசிக்காமல் கையில் இருந்த வாட்சை கழற்றி விவேக்கில் கையில் கொடுத்துவிட்டாராம். இதைப் பார்த்து விவேக் எதுவும் பேசமுடியாமல் ஆனந்த கண்ணீர் வடித்தாராம். இதுகுறித்து ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த விவேக், அந்த செய்தியில் கூறியபடி எதுவும் நடக்கவில்லை. ஆனால், அது இப்போது பெரிய விஷயமில்லை.

அந்த செய்தியில் ஒரு டெக்னிக்கல் பிழை உள்ளது. அஜித் எனக்கு பரிசாக கொடுத்தது ரோலக்ஸ் அல்ல, செய்கே (Seiko) வாட்ச் என்று கூறியுள்ளார். அஜித்தின் சிறந்த மனிதர் என்பதற்கு இதுவும் சான்று என்றும் தெரிவித்துள்ளார்.

Related Posts