வேதாளம் படத்தில் ஆளுமா டோளுமா என்ற சூப்பர் ஹிட் பாடலை கொடுத்த அனிருத், தற்போது அஜித்தின் 57-வது படத்திற்கு மீண்டும் இசையமைக்கிறார்.
தற்போது அவர் சிவகார்த்திகேயனின் ரெமோ பாடல்கள் அனைத்தையும் முடித்து விட்டதால், அப்படத்திற்கான பின்னணி இசையமைப்புகளில் கவனம் செலுத்தியபடி அவ்வப்போது அஜித் படத்திற்கான டியூன் ரெடி பண்ணுவதிலும் கவனம் செலுத்தி வந்தார்.
அந்த வகையில், அஜித் படத்துக்கு வித்தியாசமான பாடல்களை கொடுத்து அவரை அசத்தி விட வேண்டும் என்று கிட்டத்தட்ட 30 நாட்கள் ராத்திரியில் தூங்காமல் கீப்போர்டு முன்பு அமர்ந்து நூற்றுக்கணக்கான டியூன்களை ரெடி பண்ணியுள்ளாராம் அனிருத்.
அப்படி தான் ரெடி பண்ணிய டியூன்களை டைரக்டர் சிவாவை அழைத்து போட்டுக்காண்பித்து அதில் நல்லதை செலக்ட் பண்ணியவர் அதையடுத்து, வெளி நாட்டிற்கு டூர் சென்றுள்ள அஜித்தின் கவனத்துக்கு கொண்டு சென்றாராம்.
அங்கு ரிலாக்ஸ் பண்ணியபடி அனிருத்தின் டியூன்களை கேட்டு ரசித்த அனிருத், அதில் தன்னை மிகவும் கவர்ந்த சில டியூன்களை டிக் செய்து அனுப்பியுள்ளாராம். அதில் ஒரு டூயட் மற்றும் ஓப்பனிங் பாடல் டியூனுக்கான இசைக்கோர்ப்பு பணிகளில் தற்போது இறங்கியிருக்கிறார் அனிருத்.
இந்த பாடல்களில் இதுவரை சினிமாவில் அதிகமாக ஒலிக்காத சில மேல்நாட்டு இசைக்கருவிகளை பயன்படுத்தி தனது இசைக்கு புதிய வடிவம் கொடுக்கப்போகிறாராம் அனிருத்.