தென்னிந்திய சினிமா ரசிகர்களை தன் அழகால் கவர்ந்தவர் அனுஷ்கா. இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ரஜினி மற்றும் அஜித் குறித்து மனம் திறந்துள்ளார்.
இதில் ’ரஜினி சாருடன் நடித்தது மனதிற்கு மிகவும் சந்தோஷம், அவருடனான நட்பு எனக்கு நிறைய சொல்லி கொடுத்தது, என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் சூப்பர் ஸ்டாருடன் பணிபுரிந்தது.
மேலும், கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித்துடன் நடித்தது பம்பர் பரிசு என்று தான் சொல்வேன், இந்த படத்திற்காக என் கால்ஷிட் முழுவதையும் மாற்றியமைத்து நடித்து கொடுத்தேன்’ என்று கூறியுள்ளார்.