அஜித்தை உரசிப்பார்த்த விஜய்!

அஜித்-விஜய் இவர்களின் போட்டி இதுநாள் சினிமாவில் மட்டும் தான் இருந்து வந்தது. நிஜவாழ்க்கையில் இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று அனைவருக்கும் தெரியும்,

ajith_vijay003

அப்படியிருக்க சமீபத்தில் விஜய் கூறியது அனைவரையும் அதிர்ச்சியடையவைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் மாபெரும் விருது வழங்கும் விழா ஒன்றில் விஜய் பேவரட் ஹீரோவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அப்போது அவர் ‘கிரீடம்தான் வெயிட்டாக இருக்க வேண்டுமே தவிர, அதை சுமக்கும் ‘தல’ வெயிட்டாக இருக்கக் கூடாது’ என்று கூறினார்.

இந்த வார்த்தையை அவர் சொல்லி முடிக்கும் போது ரசிகர்களிடம் விசில் சத்தம் பறந்தது,

ஆனால் இவர் இதை எதார்த்தமாகவே பேசியிருந்தாலும், இதை சொல்லி முடித்தவுடன் விழாவில் கலைஞர்களிடையே சலசலப்பு இருந்தது.

Related Posts