அஜித்தை இயக்குகிறாரா அட்லி?

விஜய்-அட்லி கூட்டணியில் வெளிவந்த ‘தெறி’ படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து, மீண்டும் அந்த கூட்டணி இணையப்போவதாக செய்திகள் வெளிவந்தது. அதனால், அட்லி அடுத்தாக விஜய் நடிக்கும் படத்தைத்தான் இயக்குவார் என்றும் கூறப்பட்டது.

Atlee-direct-to-ajith

ஆனால், தற்போது அட்லி அடுத்ததாக அஜித்தை வைத்து ஒரு படத்தை இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு அட்லியை தனது இல்லத்திற்கு அஜித் வரவழைத்து, தனக்கு ஏற்றமாதிரி கதை இருந்தால் கூறுமாறு கேட்டாராம்.

அட்லியும் அஜித்திக்கு உடனடியாக ஒரு கதையை கூறியிருக்கிறார். அந்த கதை பிடித்துப் போனதும் உடனடியாக அடுத்தடுத்த வேலைகளை தொடங்க சொல்லி அட்லி உத்தரவிட்டுள்ளாராம். சிவா படத்தை முடித்துவிட்டு அஜித் அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடிப்பார் என தெரிகிறது.

Related Posts