அஜித்துடன் பேச 20 நிமிடங்களே கிடைத்தது: பால சரவணன் வருத்தம்

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு அறிமுகமானவர் பால சரவணன். இவர் தமிழில் ‘குட்டிப்புலி’, ‘என்றென்றும்’, ‘திருடன் போலீஸ்’, ‘டார்லிங்’ உள்ளிட்ட பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்துள்ளர். தற்போது, அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘வேதாளம்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ajith-saravanan-bala

இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து பாலசரவணன் கூறும்போது, நான் வேதாளத்துக்காக சென்னை மற்றும் கொல்கத்தாவில் 2 வாரம் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். இதில், அஜித் சாருடன் எனக்கு பேச வெறும் 20 நிமிடங்களே கிடைத்தது. தீபாவளிக்கு வெளியாக வேண்டும் என்பதால் மழை, வெயில் பாராமல் இடைவிடாது படப்பிடிப்பு நடந்தது. பிசியான படப்பிடிப்பில் யாருடனும் அமர்ந்து பேசுவதற்கு சிறிது நேரம்கூட கிடையாது.

அந்த நேரத்திலும் அஜித் சார் என்னிடம் எனக்கு கல்யாணம் ஆகிவிட்டதா? என்று கேட்டார். நான் என்னுடைய காதல் கதையை அவரிடம் சொன்னேன். அதை பொறுமையுடன் கேட்ட அவர், தன்னுடைய கேமராவில் என்னை புகைப்படம் எடுத்துள்ளார். அந்த படம் எப்போது வெளியாகும் என்று ஆவலோடு காத்திருக்கிறேன் என்று கூறினார்.

பாலசரவணன் தற்போது ‘ஒருநாள் கூத்து’, ‘உள்குத்து’, புருஸ்லீ’ ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

Related Posts